நகராட்சிகளில் 274 வேட்பு மனுக்கள் ஏற்பு
அரியலூர்- ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் 274 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.
அரியலூர்:
வேட்பு மனுக்கள் பரிசீலனை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகளிலும், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளிலும் உள்ள 69 பதவியிடங்களுக்கு மொத்தம் 419 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அந்த வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை நேற்று அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் முன்னிலையில் நடந்தது.
இதில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் என அரியலூர் நகராட்சியில் வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 137 பேரும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 144 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், அரியலூர் நகராட்சியில் 3 பேரின் வேட்பு மனுக்களும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 4 பேரின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
274 மனுக்கள் ஏற்பு
இதைத்தொடர்ந்து அரியலூர் நகராட்சியில் 134 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. ஜெயங்கொண்டம் நகராட்சியில் 4-வது வார்டுக்கு அ.ம.மு.க.வை சேர்ந்த சவுந்தர்யா சந்திரமோகன் தாக்கல் செய்த 2 மனுக்களில் ஒரு மனு ஏற்கப்பட்டு, மற்றொரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 12-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தாக்கல் செய்த 2 மனுக்களில் ஒரு மனு ஏற்கப்பட்டு, மற்றொரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 13-வது வார்டுக்கு பா.ம.க. வேட்பாளர் ரதிதேவி தாக்கல் செய்த 3 மனுக்களில் ஒரு மனு ஏற்கப்பட்டு, மற்ற 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம் நகராட்சியில் மொத்தம் 140 மனுக்கள் ஏற்கப்பட்டது.
பேரூராட்சிகளில்...
உடையார்பாளையம் பேரூராட்சியில் வேட்பு மனு தாக்கல் செய்த 63 பேரின் வேட்பு மனுக்களும், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் வேட்பு தாக்கல் செய்த 75 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story