திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
திருவட்டார்:
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
திற்பரப்பு அருவி
“குமரியின் குற்றாலம்” என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கு உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் வெளி மாநில சுற்றுலா பயணிகளும் வந்து அருவியில் குளித்து மகிழ்வது வழக்கம்.
திற்பரப்பு அருவியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்த சில வாரங்களாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் திரும்பி சென்றனர்.
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் காரணமாக திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
குளித்து மகிழ்ந்தனர்
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் உற்சாகம் அடைந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அதன்பிறகு அருவி எதிரில் உள்ள பூங்கா மற்றும் அலங்கார நீரூற்று ஆகியவற்றையும் பார்த்து ரசித்தனர்.
பின்னர் அருவியின் மேல் பகுதியில் அணைக்கட்டில் உல்லாச படகு சவாரி செய்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story