கரும்பு வெட்டும் பணி


கரும்பு வெட்டும் பணி
x
தினத்தந்தி 6 Feb 2022 4:25 PM IST (Updated: 6 Feb 2022 4:25 PM IST)
t-max-icont-min-icon

கரும்பு வெட்டும் பணி தொடங்கியது

மடத்துக்குளம் பகுதியில் வெல்லம் உற்பத்திக்காக கரும்பு வெட்டும் பணி தொடங்கியுள்ளது.
வெல்லம் உற்பத்தி
மடத்துக்குளம் புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதியில் கரும்பு முக்கிய பயிராக உள்ளது. ஆண்டு தோறும்  4000 ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. பாரம்பரியமாக கரும்பு சாகுபடி உள்ளதால், கரும்பை மூலப்பொருளாக பயன்படுத்தி வெல்லம் உற்பத்தி செய்யும் தொழில் நடக்கிறது.  
  மடத்துக்குளம் தாலுகா வேடபட்டி, சாமராயபட்டி, கொமரலிங்கம் மற றும் பழனி தாலுகா பாப்பம்பட்டி, நெய்க்காரபட்டி உள்ளிட்ட பல இட ங்களில் வெல்லம் உற்பத்தி செய் யும் ஆலைசாளைகள் உள்ளன. இ ங்கு கரும்பை எந்திரத்தில் அரை த்து கரும்பு சாறு எடுத்து அதை கொதிக்க வைத்து பாரம்பரிய முறையில் அச்சு வெல்லம், உருண்டை வெல்ல ம்  தயாரிக்கின்றனர். 
கரும்பு அறுவடை 
    மடத்துக்குளம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகள் அறுவடை செய்து இதற்காக கொண்டு செல்ல ப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் குறித்த பருவத்தில் கரும்பு சாகுபடி செய்யப்படும்.  ஆனால் மடத்துக்குளம் பகுதியில் அமராவதி ஆலையின் அரவை மற்றும் ஆலைசாளைகளில் வெல்லம் உற்பத்தி செய்யும் மாதங்களில் அறுவடை செய்ய தக்கபடி ஜனவரி, தொடங்கி ஏப்ரல் வரை சாகுபடி செ ய்யப்படுகிறது. இந்த அடிப்படையில் கடந்த ஆண்டு சாகுபடி செய்யப்பட்ட கரும்பு பயிர்கள்  அறுவடை தற்போ து கொமரலிங்கம் சுற்று பகுதியில் தொடங்கி உள்ளது.
  இதற்காக விவசாய தொழிலாளர் கள்பலமாவட்டங்களிலிருந்து அழை த்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் கரு ம்புகளை வெட்டி, சிறிய கட்டுகளாக் கி டிராக்டர் மற்றும் லாரிகளில் பா ரம் ஏற்றுகின்றனர்.  
இதுகுறித்து விவசாயிகள் கூறிய தாவது  நடப்பாண்டு கரும்பு அறு வடை பணி தொடங்கியுள்ளது. தற் போது வெல்லம் உற்பத்திக்கு கொ ண்டு செல்கிறோம். இதனைத் தொ டர்ந்து சில வாரங்களில் அமராவதி ஆலையில் அரவை தொடங்குகிறது.  இதனால் இன்னும் ஆறு மாதத் திற்கு கரும்பு வெட்டும் பணி நீடிக்கும்

Next Story