சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசார் இன்று தாமலேரிமுத்தூர், புள்ளானேரி, அச்சமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது புள்ளானேரியில் உள்ள குட்டூர் பகுதியை சேர்ந்த மகாதேவன் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 35), ஆறுமுகம் மனைவி லட்சுமி (45) ஆகிய இருவரும் அவர்களது வீட்டின் பின்புறத்தில் மறைவான இடத்தில் சாராயம் விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதே போன்று சின்னமூக்கனூர் பகுதியில் உள்ள சிலிப்பி வட்டம் பகுதியில், முட்புதரில் திருப்பத்தூரை அடுத்த கவுதம்பேட்டை பகுதியை சேர்ந்த சங்கர் (52) என்பவரும் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, தலா 10 லிட்டர் சாராயம் வீதம் 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
Related Tags :
Next Story