மாடம்பாக்கம் கிராமத்தில் 26 பயனாளிகளுக்கு கழிவறை கட்ட செயல்முறை ஆணை
மாடம்பாக்கம் கிராமத்தில் 26 பயனாளிகளுக்கு கழிவறை கட்ட செயல்முறை ஆணையை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மாடம்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் மத்திய மாநில அரசின் பங்களிப்புடன் ரூ.12 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தனிநபர் இல்லக் கழிவறை கட்டுவதற்கான செயல்முறை ஆணையை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ராஜலட்சுமி ராஜி, ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் தீபக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் கலந்து கொண்டு 26 பயனாளிகளுக்கு கழிவறை கட்டுவதற்கான செயல்முறை ஆணையை வழங்கினார். உடன் மாடம்பாக்கம் ஊராட்சி செயலாளர் மொய்தீன் உள்பட பலர் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள சுடுகாடு சாலைகள் அமைக்கவும், இருளர்கள் வசிக்கும் வீடுகளை புதுப்பித்து தரவேண்டியும், அரசு உயர்நிலைப்பள்ளியில் இணைப்பு கட்டிடம், பிள்ளையார் கோவில் தெருவிலிருந்து வள்ளலார் நகர் வரை தார் சாலை அமைத்து தர கோரிக்கை ஆகியவற்றை அடங்கிய மனுக்களை ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றியக்குழு தலைவரிடம் வழங்கினார்.
Related Tags :
Next Story