கூடலூர் அருகே வியாபாரியிடம் ரூ.1.45 லட்சம் பறிமுதல் பறக்கும் படை சோதனையில் சிக்கியது
கூடலூர் அருகே பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் வியாபாரியிடம் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும் படை அலுவலர்கள் முக்கிய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரமேஷ்வரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் நேற்று காலை கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் துர்க்கை அம்மன் கோவில் அருகே வாகன தணிக்கை செய்தனர். அப்போது கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரியான அன்சலாம் என்பவர் ஓட்டிவந்த காரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
ரூ.1 லட்சத்து 45 ஆயிரம்
இதில் காரில் அவர் கொண்டுவந்த பையில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 500 இருப்பது தெரியவந்தது. ஆனால் அவரிடம் இந்த பணத்திற்குரிய எந்த ஆவணங்களும் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரமேஷ்வரன் பறிமுதல் செய்து உத்தமபாளையம் கருவூலகத்தில் ஒப்படைத்தார்.
இந்தநிலையில் அன்சலாம் நேற்று மாலையில், காய்கறி விற்பனை செய்தவர்களுக்கு கொடுப்பதற்காக பணத்தை கொண்டு வந்ததாகவும், அதற்கான ஆவணங்களையும் பறக்கும் படை அதிகாரிகளிடம் திரும்ப வந்து கொடுத்தார். இதையடுத்து ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் அவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது,
Related Tags :
Next Story