போலீஸ் சார்பில் அனைத்து கட்சி கூட்டம்
கம்பத்தில் போலீஸ் சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
கம்பம்:
கம்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போலீஸ் துறை சார்பில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு உத்தமபாளையம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் லாவண்யா, புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பவர்கள் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று கடைசி ஒரு மணி நேரம் (மாலை 5 மணி முதல் 6 மணி) வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வாக்குச்சாவடிக்கு முன்பு கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வேட்பாளர்கள் பிரசாரத்தின் போது உடன் 3 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வேட்பாளர்கள் மற்றும் உடன் செல்வோர் முககவசம் அணிதல் வேண்டும். உள்ளரங்கு பிரசார கூட்டம் நடத்த 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். திறந்த வெளி பிரசாரத்திற்கு அனுமதி இல்லை என அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ்., பா.ஜ.க., அ.ம.மு.க., நாம்தமிழர் உள்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story