நாமக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்


நாமக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 6 Feb 2022 9:52 PM IST (Updated: 6 Feb 2022 9:52 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணும் மையம்
நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 3 மையங்களில் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, ராசிபுரம் எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி என 3 இடங்களில் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான ஏற்பாடுகளை நகராட்சி மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
நாமக்கல் நகராட்சி, எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, மோகனூர், பாண்டமங்கலம், பரமத்தி, பொத்தனூர், சேந்தமங்கலம், பரமத்திவேலூர் மற்றும் வெங்கரை பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக வாக்குச்சாவடி வாரியாக, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வைப்பதற்கான இடங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இதையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்படும் அறைகளில் வாக்குச்சாவடிகளின் எண்களை பணியாளர்கள் பெயிண்டால் எழுதி வருகின்றனர். அடுத்த கட்டமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறைகளை 24 மணி நேரமும் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட இருப்பதாக தெரிவித்தனர்.
முன்னேற்பாடு பணிகள்
இதேபோல் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ராசிபுரம் நகராட்சி, அத்தனூர், பட்டணம், பிள்ளாநல்லூர், ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகளும், திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் மற்றும் மல்லசமுத்திரம், படைவீடு, ஆலாம்பாளையம் பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகளும் எண்ணப்பட உள்ளன. அங்கும் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து முன்ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story