போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பழனி பகுதியில் போலீசார் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
பழனி:
பழனியில், போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்சம் இன்றி வாக்களிக்கலாம் என்பதை உணர்த்தும் விதமாக இந்த அணிவகுப்பு நடந்தது. இதில் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையில் போலீசார் ஊர்வலமாக சென்றனர். பழனி பஸ்நிலைய பகுதியில் தொடங்கிய ஊர்வலம், காந்திரோடு, பெரியகடைவீதி, தேரடி, பழைய தாராபுரம் ரோடு, சுப்பிரமணியபுரம் ரோடு, நால்ரோடு வழியாக பெரியார் சிலை பகுதியில் நிறைவு பெற்றது.
இதையடுத்து நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம் ஆகிய பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், மகேந்திரன் மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story