ஓசூரில் வெவ்வேறு சாலை விபத்துகளில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் பலி
ஓசூரில் வெவ்வேறு சாலை விபத்துகளில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
ஓசூர்:
ஓசூரில் வெவ்வேறு சாலை விபத்துகளில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
தனியார் நிறுவன மேற்பார்வையாளர்
ஓசூர் தின்னூர் அருகே உள்ள மிடிகிரிப்பள்ளியை சேர்ந்தவர் சேட்டு (வயது 47). ஓசூரில் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இவர் மோட்டார்சைக்கிளில் இ.எஸ்.ஐ. ஜங்ஷன்-தளி உள்வட்ட சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சேட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு விபத்து
திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி அருகே உள்ள கூத்தாண்டகுப்பம் பக்கமுள்ளது வீரபத்திரம் பகுதியை சேர்ந்தவர் திவாகர் (25). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் இவர் பெங்களூரு - ஓசூர் சாலையில் ஓசூர் தர்கா முத்து மாரியம்மன் கோவில் அருகில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த திவாகர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story