துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது விபத்து சரக்கு வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 3 பேர் பலி 19 பேர் படுகாயம்


துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது விபத்து சரக்கு வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 3 பேர் பலி 19 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 6 Feb 2022 10:07 PM IST (Updated: 6 Feb 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது சரக்கு வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 3 பேர் பலியாகினர். இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாலக்கோடு:
பாலக்கோடு அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது சரக்கு வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 3 பேர் பலியாகினர். இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
துக்க நிகழ்ச்சி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஜக்கசமுத்திரம் ஓட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த 15 பெண்கள், 7 ஆண்கள் என மொத்தம் 22 பேர் காங்கிரிபுதூர் பகுதியில் உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சிக்காக  சரக்கு வேனில் நேற்று காலை சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் மீண்டும் ஊருக்கு திரும்பினர். சரக்கு வேனை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் காளி ஓட்டி சென்றார்.
பெட்டமுகிலாலம் செல்லும் மலைப்பாதையில் வேன் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் சென்ற அனைவரும் படுகாயம் அடைந்தனர். இதில் ஓட்டுப்பட்டியை சேர்ந்த தீபா (வயது 35), தங்கம்மாள் (55) ஆகிய 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலி 3 ஆக உயர்ந்தது
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் இறந்தவர்கள் குடும்பத்தினர், உறவினர்கள் விரைந்து வந்து 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.  விபத்தில் படுகாயமடைந்த 19 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாதப்பன் (55) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் பலியானாவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. மேலும் படுகாயமடைந்த அனைவரும் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாரண்டஅள்ளி போலீசார் விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் காளியை வலைவீசி தேடி வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது சரக்கு வேன் கவிழ்ந்து ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story