காக்கையாடி ஆறுமுகசுப்பிரமணியசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
காக்கையாடி ஆறுமுகசுப்பிரமணியசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே உள்ள பழையனூர் காக்கையாடியில் ஆறுமுகசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது ஆறுமுகசுப்பிரமணியசாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு விபூதி மற்றும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story