தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
கபிஸ்தலம் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கபிஸ்தலம்:-
கபிஸ்தலம் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
முன்விரோதம்
கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் நடுத்தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது28). தொழிலாளி. இவருக்கும் கபிஸ்தலம் அருகே உள்ள ராமானுஜபுரம் ராமச்சந்திரபுரம் தெருவை சேர்ந்த மணிகண்டன் (23) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மணிமாறன், உமையாள்புரம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மணிகண்டன் முன்விரோதம் காரணமாக அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, தான் வைத்திருந்த அரிவாளால் மணிமாறனை தலை மற்றும் கை, கால்களில் சரமாரியாக வெட்டி உள்ளார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதில் படுகாயம் அடைந்த மணிமாறன் உடனடியாக சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மணிமாறன் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதாகிரேசி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story