தேர்தல் பறக்கும் படையினர் திடீர் வாகன சோதனை


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 6 Feb 2022 10:43 PM IST (Updated: 6 Feb 2022 10:43 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பறக்கும் படையினர் திடீர் வாகன சோதனை நடத்தினர்.

நொய்யல்
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பை தமிழக தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு தேர்தல் நடைமுறை விதிகள் அமலுக்கு வந்து தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் குழுவினர் ஆங்காங்கே வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு மனு மீதான பரிசீலனை முடிந்துள்ளது. இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்குள் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறக்கூடியவர்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்நிலையில் கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி மற்றும் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் வரும் 19-ந் தேதி   அன்று நடைபெறுகிறது. இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் நிலையான பறக்கும் படை அலுவலர் மற்றும் தாசில்தார் சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் மணிகண்டன், ஆதில் மற்றும் வீடியோகிராபர் ஆகியோர் கொண்ட குழுவினர் புஞ்சை தோட்டக்குறிச்சி மற்றும் புகழூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதேபோல் பாலத்துறை அருகே பரமத்திவேலூர்-நொய்யல் நெடுஞ்சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள், சரக்கு ஆட்டோக்கள், லாரிகள் என அனைத்து வாகனங்களையும் ஓரமாக நிறுத்தி ஒவ்வொரு வாகனங்களிலும் பணம், நகை, பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்கிறார்களா? என தீவிர சோதனை மேற்கொண்டனர்.

Next Story