திருச்செந்தூரில் ரூ.1.26 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை
திருச்செந்தூரில் ரூ.1.26 லட்சம் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்செந்தூர்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையடுத்து வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலையில் திருச்செந்தூரில், குலசேகரபட்டினம் சாலையில் பறக்கும்படை அதிகாரி தாசில்தார் தில்லைபாண்டி தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்து உள்ளிட்ட பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணம் இன்றி ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 980 இருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, திருச்செந்தூர் நகராட்சி தேர்தல் அதிகாரியும் ஆணையருமான வேலவனிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story