அண்ணன்-தம்பி மீது தாக்குதல்
வேதாரண்யம் அருகே அண்ணன்-தம்பியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே அண்ணன்-தம்பியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாக்குவாதம்
வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு கிராமம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் சுப்பையன் (வயது55). இவர் சம்பவத்தன்று அந்த ஊரில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய சென்ற போது அதே ஊரை சேர்ந்த பாக்கியராஜ்(வயது37), பிரசாத்(32) ஆகியோருக்கும், சுப்பையனுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் அங்கிருந்து வீட்டுக்குச்சென்று விட்டார்.
தாக்குதல்
பின்னர் சுப்பையன் மோட்டார் சைக்கிளில் நெய்விளக்கு கடைத்தெருவுக்கு சென்றுள்ளார். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாக்கியராஜ், பிரசாத் ஆகிய இருவரும் சுப்பையனின் மோட்டார் சைக்கிளை கீழே தள்ளி விட்டு அருகில் கிடந்த உருட்டுக்கட்டையால் அவரை தாக்கினர்.
இதை பார்த்து தடுக்க வந்த சுப்பையனின் அண்ணன் கதிர்வேல் (58) என்பவரையும் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 பேர் கைது
இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியராஜ், பிரசாத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story