கோவில் குளத்தில் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படுமா?


கோவில் குளத்தில் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படுமா?
x
தினத்தந்தி 6 Feb 2022 10:51 PM IST (Updated: 6 Feb 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

கீழையூரில் கோவில் குளத்தில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

வேளாங்கண்ணி:
கீழையூரில் கோவில் குளத்தில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா? என  கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கோவில் குளம்
வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஊராட்சியில்  ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ரெங்கநாத பெருமாள் கோவிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் குளிக்கவும், போர் அமைத்து குடிநீருக்காவும் மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்தனர். 
ஆகாயத்தாமரை செடிகள்
இந்த நிலையில் தற்போது அந்த குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள்  மண்டி புதர் போல் காட்சி அளிக்கிறது. 
இந்த செடிகளில் பாம்பு, பூச்சி உள்ளிட்ட விஷ ஜந்துகள் உள்ளன.  குளத்தில் குளிக்கும் பொதுமக்களை பூச்சிகள் கடிப்பதால் உடலில் அரிப்பு மற்றும் தோல் நோய்கள் ஏற்படுகிறது.
 ஆகாயத்தாமரை மண்டி கிடப்பதால் பொதுமக்கள் குளிக்கவும், குடிநீருக்காவும் குளத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை பார்வையிட்டு புதர் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர். 

Next Story