பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்


பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்
x
தினத்தந்தி 6 Feb 2022 10:56 PM IST (Updated: 6 Feb 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சீர்காழி:
கொரோனா தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
மெகா பூஸ்டர் தடுப்பூசி முகாம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் 21 மெகா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்தது. இதனை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 21-வது கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் ஊசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரைக்கும் நடைபெற்ற இலக்கு 7 கோடியே 91 லட்சத்து 889 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டோர் 5 கோடியே 25 லட்சமும், 2-வது டோஸ் 4.5 கோடியும், முதல் தவணை 90.75 சதவீதமும், 2-வது தவணை 70.02 சதவீதமும், இதுவரைக்கும் 70 சதவீதத்தை தாண்டி உள்ளோம். ஒட்டு மொத்தம் 9.67 கோடி தவணை முறையில் செலுத்தப்படுள்ளது. மேலும் மயிலாடுதுறை, ராணிபேட், தென்காசி போன்ற சில மாவட்டங்களில் இன்னமும் தடுப்பூசி செலுத்துவதில் தயக்கம் உள்ளது.  இது பேரிடர் மாவட்டம் என்பதால் உலகளவில் தடுப்பூசி போட்டதால் தான் மூன்றாம் அலை இறப்பை கணிசமாக குறைய தொடங்கி உள்ளது. 
விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்
உலக அளவில் மக்கள் படுக்கை வசதி, பிராணவாயு (ஆக்சிஜன்) வசதி இல்லாமல் தவித்து வந்த நிலையில், தற்போது தமிழகத்தில் 1.35 லட்சம் படுக்கையறைகள் இருக்கும் வகையில் 4 விழுக்காடு நோய் தொற்று உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனை சிகிச்சையில் இருந்து வருகின்றனர். பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இந்திய அளவில் ஏறுமுகமாக இருந்த கொரோனா தொற்று தற்போது இறங்கு முகமாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்தி கொண்டது தான்.
தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் வீதம் தொற்று குறைந்து வருகிறது. கொரோனா தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு, முககவசம், சமூக இடைவெளியை கடைப்பிடித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story