2 இடங்களில் வாக்கு எண்ணும் மையம்- கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு
தஞ்சையில் 2 இடங்களில் அமைக்கப்படும் வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்:-
தஞ்சையில் 2 இடங்களில் அமைக்கப்படும் வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
உள்ளாட்சித்தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துவிட்டது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ஜ.க., தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 196 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1 லட்சத்து 98 ஆயிரத்து 597 பேர் வாக்களிக்க உள்ளனர். தஞ்சை மாநகரில் 2 இடங்களில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
கலெக்டர் ஆய்வு
தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பதற்கான முன்னேற்பாடு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம், முகவர்கள் அமரக்கூடிய பகுதி ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்யும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் அவர், மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story