இல்லம் தேடி மையம் தொடக்க விழா


இல்லம் தேடி மையம் தொடக்க விழா
x
தினத்தந்தி 6 Feb 2022 11:24 PM IST (Updated: 6 Feb 2022 11:24 PM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் ஒன்றியத்தில் இல்லம் தேடி மையம் தொடக்க விழா நடைபெற்றது.

கோட்டூர்:
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின்  சார்பில் அந்தந்த ஒன்றியங்களில் உள்ள குடியிருப்புப்பகுதிகளில் 2,500 இல்லம் தேடி கல்வி மையங்கள் வரை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அதன்படி கோட்டூர் ஒன்றியம்  சித்தமல்லி, நொச்சியூர் ஆகிய பகுதிகளில் இல்லம் தேடி கல்வி மையங்களின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு நொச்சியூர் ஊராட்சி தலைவர் இனியசேகரன், சித்தமல்லி ஊராட்சி தலைவி சிவசங்கரி ஜெயபால் ஆகியோர் தலைமை தாங்கி, இல்லம் தேடி கல்வி மையங்களை தொடங்கி வைத்தனர். இதில்  இல்லம் தேடி கல்வி  திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்கபாபு, கலைச்செல்வன், தலைமை ஆசிரியர் வைத்தியநாதன், கல்வியாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தன்னார்வலர்கள் ராஜலட்சுமி, பவதாரினி, வர்ஷினி ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story