கொத்தனார் பலி
பழையாறு அருகே சரக்கு வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி கொண்டதில் கொத்தனார் பலியானார்.
சீர்காழி:
பழையாறு அருகே சரக்கு வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி கொண்டதில் கொத்தனார் பலியானார். மனைவி படுகாயம் அடைந்தார். சரக்கு வேன் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்
பழையாறு அருகே உள்ள புதுபட்டினம் கிராமம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). கொத்தனார். இவருடைய மனைவி சித்ரா (40). இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் புதுப்பட்டினத்தில் இருந்து சீர்காழி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே சீர்காழியில் இருந்து செம்மங்குடி நோக்கி வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கொத்தனார் பலி
இ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ரமேஷ், பின்னாடி அமர்ந்து இருந்த அவருடைய மனைவி சித்ரா ஆகியோர் தூக்கி எறியப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக இறந்தார். சித்ரா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சரக்கு வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story