ஆம்பூர் அருகே 4 அடி நீள நாகப்பாம்பை பிடித்த பெண்


ஆம்பூர் அருகே 4 அடி நீள நாகப்பாம்பை பிடித்த பெண்
x
தினத்தந்தி 6 Feb 2022 11:54 PM IST (Updated: 6 Feb 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே 4 அடி நீள நாகப்பாம்பை பெண் ஒருவர் கையால் பிடித்தார்.

ஆம்பூர்

ஆம்பூர் அடுத்த குமாரமங்கலம் பகுதியில் கற்பகம் என்பவரது வீட்டின் அருகே 4 அடி நீள நாகப்பாம்பு ஒன்று இருந்தது தெரியவந்தது. அதைப் பார்த்த கற்பகத்தின் தங்கை சுமதி அந்த பாம்பை பிடித்து ஒரு டப்பாவில் போட்டு அடைத்து வைத்தார். பின்னர் வனத்துறையினருக்கு இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் நாகபாம்பை மீட்டு அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

Next Story