வேலூரில் பா.ஜ.க. கொடி, பேனர் தீ வைத்து எரிப்பு


வேலூரில் பா.ஜ.க. கொடி, பேனர் தீ வைத்து எரிப்பு
x
தினத்தந்தி 6 Feb 2022 11:58 PM IST (Updated: 6 Feb 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாநகராட்சி 52-வது வார்டு பா.ஜ.க. தேர்தல் அலுவலகத்தின் முன்பு பா.ஜனதா கட்சியின் கொடி, பேனரை எரித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலூர்

வேலூர் மாநகராட்சி 52-வது வார்டு பா.ஜ.க. தேர்தல் அலுவலகத்தின் முன்பு பா.ஜனதா கட்சியின் கொடி, பேனரை எரித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பா.ஜ.க. கொடி, பேனர் எரிப்பு

வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு வேலூர் மாவட்ட தலைவராக உள்ளார். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாநகராட்சி 52-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தலையொட்டி வேலூர் சாய்நாதபுரம் சாஸ்திரிநகரில் 52-வது வார்டு பா.ஜ.க. சார்பில் தேர்தல் அலுவலகம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. அந்த அலுவலகம் முன்பாக பா.ஜ.க. கொடிகள் தோரணங்களாக கட்டப்பட்டிருந்தன. மேலும் கட்சி தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருந்த பேனரும் வைத்திருந்தனர்.

52-வது வார்டு பா.ஜ.க. தேர்தல் அலுவலகம் நேற்று திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இதையொட்டி நேற்று காலை 6.30 மணியளவில் கார்த்திகேயன் தேர்தல் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அலுவலக வாசலின் முன்பு கட்டப்பட்டிருந்த பா.ஜ.க. கொடி தோரணங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த பேனரும் கிழிக்கப்பட்டு, அதற்கும் தீ வைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவில் மர்மநபர்கள் பா.ஜ.க. கொடி தோரணங்கள் மற்றும் பேனரை தீ வைத்து எரித்தது தெரிய வந்தது.

போலீசில் புகார்

இதுகுறித்து அவர் உடனடியாக வேலூர் மாவட்ட தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து மாநில செயலாளர் கார்த்தியாயினி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து கார்த்திகேயன், பாகாயம் போலீசில் புகார் அளித்தார்.

அதில், வேலூர் மாநகராட்சி 52-வது வார்டு பா.ஜ.க. தேர்தல் அலுவலகம் இன்று (நேற்று) காலை திறக்கப்பட இருந்த நிலையில் நள்ளிரவில் மர்மநபர்கள் பா.ஜ.க. கொடி தோரணங்கள், பேனரை எரித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை உடனடியாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள். வேலூரில் பா.ஜ.க. கொடி, பேனர் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story