தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 6 Feb 2022 11:59 PM IST (Updated: 6 Feb 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி பொதுமக்கள் குறைகள்பற்றிய பகுதி

 மின்கம்பங்கள் சேதம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் பெருந்துறைபட்டு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 15-க் கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. ஒரு சில இடங்களில் விவசாய நிலங்கள், சாலை ஓரங்களில் உள்ள மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. மேலும் சில இடங்களில் மின் கம்பிகள் தாழ்வான உள்ளது. சேதமான மின்கம்பங்களை மின்வாரியத்துறை அதிகாரிகள் அகற்றி விட்டு புதிய கம்பம் நட வேண்டும்.
-குரு, பெருந்துறைபட்டு.

 இடையூறாக இருக்கும் மின்கம்பம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா மோசூர் அம்பேத்கர் நகர் பகுதியில் அன்னை தெரசா 2-வது தெருவுக்கு செல்லும் சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக மின் கம்பம் ஒன்று உள்ளது. இதனால் அந்த வழியாக குடிநீர் டிராக்டர், கழிவுநீர் அகற்றும் வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியவில்லை. மின்கம்பத்தை சாலை ஓரமாக அமைக்க அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும், இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையின் நடுவே இருக்கும் மின்கம்பத்தை அகற்றி ஓரமாக நட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
-விஷ்ணு, மோசூர்.

திருவண்ணாமலை செங்கம் ரோடு பகுதியில் சேஷாத்ரி ஆஸ்ரமம் உள்ளது. அதன் பின்பக்கம் 30 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள். அந்தக் குடும்பத்தினர் செல்லும் பாதையின் நடுவே மின் கம்பம் ஒன்று இடையூறாக உள்ளது. அந்த வழியாக ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர். அவசரத்துக்கு ஒரு ஆம்புலன்ஸ் அல்லது ஆட்டோ ஆகியவை கூட தெரு உள்ளே வர முடியாத படி மின் கம்பம் இடையூறாக உள்ளது. அந்த மின்கம்பத்தை அகற்றி வேறொரு இடத்தில் நட வேண்டும். மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-நாராயணன், திருவண்ணாமலை.

கழிவுநீரை தெருவில் விடும் அவலம்

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் ஊராட்சியில் உள்ள யாதவர் வீதியில் தொடர்ந்து கழிவுநீரும், குடிநீரும் கலந்து ஓடுகிறது. பள்ளமாக இருக்கும் இடத்தில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் பெருகி நோய் பரவும் அபாயம் உள்ளது. சிறுவர், சிறுமிகள் தெருவில் விளையாட முடியவில்லை. யாதவர் வீதியில் எப்போதும் தேங்கி நின்று சுகாதார சீர்கேட்டை ஏற்படும் கழிவுநீருக்கு ஊராட்சி நிர்வாகம் தீர்வு காண வேண்டும்.
-நகுலன், பாணாவரம்.

குடிநீர் தட்டுப்பாடு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் உள்ள வளையாம்பட்டு பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். மக்களுக்கு வாரத்துக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. எனினும் அந்தக் குடிநீர் போதவில்லை. மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்தால் குடிநீர் தட்டுப்பாடு தீரும். ஆனால் ஊராட்சி நிர்வாகம் பல ஆண்டுகளாக ஒகேனக்கல் குடிநீரை வாங்கவில்லை. தற்போது கோடைக்காலம் வர உள்ளதால் ஊராட்சி நிர்வாகம் ஒகேனக்கல் குடிநீரை வாங்கி குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.காமராஜ், வாணியம்பாடி. 
 அதிகாரிகள் கவனிப்பார்களா?

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சியில் கலவை சாலையில் முஸ்லிம் தொடக்கப்பள்ளி மற்றும் அடுத்தடுத்து 2 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. அதில் ஏராளமான சிறுவர், சிறுமிகள் படித்து வருகின்றனர். அங்கன்வாடி மையத்துக்கு மெயின் ரோடு வழியாக தான் வர வேண்டும். அந்த வழியாக அதிக வாகனப் போக்குவரத்தால் சிறுவர், சிறுமிகள் அச்சப்படுகின்றனர். அங்கன்வாடி மையத்தின் பின் பக்க பாதை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி சிறுவர், சிறுமிகள் வந்தனர். ஆனால் பின்பக்கம் கதவை பூட்டி விட்டனர். இதனால் அங்கன்வாடியில் வேலை பார்க்கும் மாற்றுத்திறனாளி பணியாளர் மற்றும் சிறுவர், சிறுமிகள் அவதிப்படுகிறார்கள். காலை, மாலை வேளையில் பின் பக்க கதவை திறந்து விட்டால் சிரமமின்றி சென்று வரலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?
எஸ்.நீதி, ஆற்காடு.

 சிறு பாலம் கட்டுவது எப்போது?

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா சாத்கர் பஞ்சாயத்து லாலாப்பேட்டை கிராமத்தில் (வட்டார வளர்ச்சி அலுவலகம் பின்பக்கம்) கடந்த 2021-ம் ஆண்டு புதிதாக சிமெண்டு சாலை போட்டார்கள். அந்தச் சாலையை இன்று வரை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எங்கள் பகுதியில் 2 தெருக்கள் உள்ளன. அதில் ஒரு தெருவின் சாலையின் குறுக்கே உள்ள கால்வாயில் சிறு பாலம் கட்ட பள்ளம் தோண்டி பல ஆண்டுகள் ஆகிறது. அதில் இன்னும் சிறு பாலம் கட்டவில்லை. பள்ளத்தைத் தோண்டி கிடப்பில் போட்டு விட்டார்கள். இதனால் அந்த வழியாக செல்ல முடியவில்லை. மற்றொரு தெருவில் கால்வாய் மீதுள்ள சிமெண்டு சிலாப் உடைந்துள்ளது. அந்த வழியாகவும் மக்கள் செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே எங்கள் பகுதியில் உள்ள 2 இடங்களில் சிறுபாலம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜீவா, லாலாப்பேட்டை. 


Next Story