வேளாண் திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கும் முறை விவசாயிகளுக்கு, அலுவலர்கள் விளக்கம்


வேளாண் திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கும் முறை விவசாயிகளுக்கு, அலுவலர்கள் விளக்கம்
x
தினத்தந்தி 7 Feb 2022 12:23 AM IST (Updated: 7 Feb 2022 12:23 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

மதுக்கூர்:-

வேளாண் திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். 

ஆலோசனை கூட்டம்

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் வட்டார உழவர் ஆலோசனை குழு கூட்டம் மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் மதுக்கூர் வட்டாரத்தை சேர்ந்த உழவர் ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு மதுக்கூர் வேளாண்மை அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார். 
மதுக்கூர் அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சுகிதா வரவேற்று பேசினார். வேளாண் துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், அந்த திட்டங்களின் பயன்கள், திட்டங்களில் பயன்பெறுவதற்கான தகுதிகள், திட்டம் மூலமாக பயன்பெற விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் வேளாண் அலுவலர்கள், விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். 

பயிற்சிகள்

இதில் அட்மா உழவர் ஆலோசனைக்குழு தலைவர் இளங்கோ, அட்மா திட்ட பயிற்சிகளை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மதுக்கூர் வடக்கு ஊராட்சியை சேர்ந்த விவசாயி மூர்த்தி நிலக்கடலை பயிரில் களை எடுப்பதற்காக சொந்தமாக உருவாக்கியுள்ள களையெடுப்பு கருவியைப்பற்றி விளக்கி கூறினார். 
கூட்டத்தில் பங்குபெற்ற அட்மா திட்ட உழவர் ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வேளாண் அலுவலர்கள் சுகிதா, அய்யா மணி ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story