‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 7 Feb 2022 12:42 AM IST (Updated: 7 Feb 2022 12:42 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான கட்டிடம்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகில் திருமலைராஜபுரம் என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பள்ளியில் கட்டிடங்கள் மிகவும் மோசமாக பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் அச்சத்துடன் படித்து வருகிறார்கள். எந்நேரமும் இடிந்துவிழும் நிலையில் உள்ளதால் மாணவ, மாணவிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். பள்ளி தற்காலிகமாக செயல்படுவதற்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். 
-பொதுமக்கள், திருமலைராஜபுரம்.

Next Story