புதுக்கோட்டை அருகே லாரி உரிமையாளர் கொலையில் பெண் உள்பட 3 பேர் கைது
புதுக்கோட்டை அருகே லாரி உரிமையாளர் கொலை வழக்கில் பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை,
லாரி உரிமையாளர் கொலை
புதுக்கோட்டை அருகே மாங்கனாம்பட்டியை சேர்ந்தவர் ரெங்கராஜன் என்கிற ராஜா (வயது 45). இவர் டிப்பர் லாரியை சொந்தமாக வைத்து இயக்கி வந்தார். இந்த நிலையில் ரெங்கராஜன் நேற்று முன்தினம் மாலை காரில் மாங்கனம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மாங்கனாம்பட்டி முக்கம் அருகே இரு தரப்பினரிடையே தகராறில் சாலையில் குறுக்கே கம்புகள், கட்டைகள் வைத்து ஒரு தரப்பினர் தடுப்பு ஏற்படுத்தி வைத்திருந்துள்ளனர். இதனை ரெங்கராஜன் அகற்றி விட்டு செல்ல முயன்ற போது சிலர் அவரை கட்டையால் அடித்து கொலை செய்தனர்.
3 பேர் கைது
இந்த கொலை சம்பவம் தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ரெங்கராஜனை கொலை செய்தது அதேபகுதியை சேர்ந்த ராஜேந்திரன், முருகேசன் மற்றும் அழகுமணி என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story