புதிதாக 74 பேருக்கு கொரோனா
மதுரையில் புதிதாக 74 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மதுரை,
மதுரையில் புதிதாக 74 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
சிகிச்சை
மதுரையில் நேற்று புதிதாக 74 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுபோல், 459 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வீட்டிற்கு சென்றனர்.
தற்போது சிகிச்சையில் 2,213 பேர் இருக்கின்றனர். அவர்களில் 49 பேர் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதுபோல், 687 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலிலும், மற்ற வர்கள் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் இருக்கின்றனர்.
மதுரையில் நேற்று 355 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் மதுரையில் இதுவரை 35 லட்சத்து 34 ஆயிரத்து 414 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
கையிருப்பு
பொதுமக்களின் வசதிக்காக அரசு மருத்துவ கல்லூரி, அரசு ஆஸ்பத்திரிகள், மாவட்ட சுகாதார கிடங்கு ஆகிய இடங்களில் 86 ஆயிரத்து 680 தடுப்பூசிகள் கையிருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story