17 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 17 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 17 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி முகாம்
இது குறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழக அரசின் உத்தரவிற்கிணங்க, பொது சுகாதாரத்துறையின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் பிப்ரவரி 3-ந்தேதி வரை மொத்தம் 17 லட்சத்து 47 ஆயிரத்து 384 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இதில் முதல் தவணை தடுப்பூசிகள் 10 லட்சத்து 20 ஆயிரத்து 8 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதில் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட 50 ஆயிரத்து 621 பேருக்கு முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
கையிருப்பு
சிவகங்கை மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி 4 ஆயிரத்து 517 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தற்போது கோவிஷீல்டு 20 ஆயிரத்து 300-ம், கோவாக்சின் தடுப்பூசி 7 ஆயிரத்து 780-ம் டோஸ்களும் மருந்துகளும் கையிருப்பில் உள்ளது.
கொரோனா நோய் தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பு பெற 15 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முழுமையாக தங்களது முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி மருந்துகளை செலுத்திக் கொள்வது அவசியம் ஆகும். தமிழக அரசின் உத்தரவின் பேரில் ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் முதலியவற்றுடன் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story