34 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்


34 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Feb 2022 1:00 AM IST (Updated: 7 Feb 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் விற்பனைக்கு வைத்திருந்த கெட்டுப்போன 34 கிலோ மீன்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை,

சிவகங்கையில் விற்பனைக்கு வைத்திருந்த கெட்டுப்போன 34 கிலோ மீன்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆய்வு

சிவகங்கை ரெயில் நிலையம் மற்றும் உழவர் சந்தை அருகே உள்ள மீன் கடைகளில் நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் திடீரென ஆய்வு நடத்தினர். இதில் ரெயில் நிலையம் அருகில் இருந்த கடைகளில் சுமார் 30 கிலோ கெட்டுப்போன மீன்களும், உழவர் சந்தை அருகே இருந்த கடைகளில் 4 கிலோ கெட்டுப்போன மீன்களும் இருந்தன.

பறிமுதல்

 நல்ல மீன்களுடன் சேர்த்து விற்பனைக்காக வைக்கப்பட்ட கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 4 கிலோ பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் 3 பேருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கபட்டது.. இது போன்ற சோதனைகள் அடிக்கடி நடத்தப்படும் என்றும், கெட்டு போன மீன்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

Next Story