விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 7 Feb 2022 1:08 AM IST (Updated: 7 Feb 2022 1:08 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை அருேக விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து ெகாண்டார்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி சிலோன் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 43). தச்சு தொழிலாளி. இந்தநிலையில் ஆறுமுகத்திற்கு சில வருடங்களாக வயிற்றுவலி இருந்ததாகவும் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர்  பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தார் அவரை உடனடியாக மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம்  உயிரிழந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story