வேன்- கார் மோதல்; 17 பேர் படுகாயம்
சிவகிரி அருகே வேன், கார் மோதிக் கொண்ட விபத்தில் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிவகிரி:
சிவகிரி அருகே வேன், கார் மோதிக் கொண்ட விபத்தில் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேன்- கார் மோதல்
விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பசும்பொன் தெருவைச் சேர்ந்தவர் வீரக்குமார் என்பவரின் மகன் ராஜா (வயது 30). இவர் தனது மகன் கார்த்திக்கிற்கு (5) தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள கருப்பசாமி கோவிலில் முடி காணிக்கை செலுத்துவதற்காக உறவினர்களுடன் வேனில் சிவகாசியில் இருந்து புளியங்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
சிவகிரி அருகே உள்ளார் கிராமம் வந்தபோது எதிரே வந்த காரும், இவர்களது வேனும் எதிர்பாராதவிதமாக மோதின.
17 பேர் படுகாயம்
இதில் ராஜா மனைவி சுகன்யா (26), மகன் கார்த்திக் (5), அருள்ராஜ் மகன் கார்த்தீஸ்வரன் (11), முத்து மனைவி ராஜாத்தி (33), மகள் ஸ்ரீ தேவி (12), மகன் சக்திவேல் (15), பழனிவேல் மகள் பாண்டிசெல்வி (23), சிவகாசி பர்மா காலனியைச் சேர்ந்த மகேஸ்வரன் மகன் மாதவன் (15), மாசனம் மகள் முத்துசெல்வி (12), வேன் டிரைவர் சிவகாசி பசும்பொன் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (53), முத்து மனைவி காளீஸ்வரி (28), சிவகாசி முத்துச்சாமி மகன் முத்துக்குமார் (35) உள்ளிட்ட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதேபோல் காரில் வந்த திருவனந்தபுரம் பிரசாத் மைதானம் வர்கலாவைச் சேர்ந்த பிரதீப் (51), அவரது மனைவி ஜெமி பிரதீப் (42) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்ததும் சிவகிரி, வாசுதேவநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். காயம் அடைந்த அனைவரையும் மீட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story