மணிமுத்தாறு அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டதால், மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
அம்பை:
2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டதால், மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
மணிமுத்தாறு அருவி
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற மணிமுத்தாறு அருவி உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், அருவிக்கரைகள், தடுப்பு கம்பிகள் சேதமடைந்தன. இதையடுத்து அங்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில், மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, மணிமுத்தாறு அருவிக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது.
2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி
இந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், மணிமுத்தாறு அருவிக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் மணிமுத்தாறு அருவிக்கு சென்றனர். அருவியில் தண்ணீர் நன்றாக விழுவதால், அதில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
எனினும் கார், வேன்களில் வந்தவர்களை மட்டுமே வனத்துறையினர் அனுமதித்தனர். மோட்டார் சைக்கிள், ஆட்டோ போன்றவற்றில் வந்தவர்களை அனுமதிக்கவில்லை. எனவே மணிமுத்தாறு அருவிக்கு செல்ல அனைத்து வாகனங்களில் வருகிறவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story