விபத்தில் 2 வாலிபர்கள் பலி
நெல்லை அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெல்லை:
நெல்லை அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வாலிபர்கள்
நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே உள்ள காடன்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் முருகன் மகன் இசக்கி தாஸ் (வயது 18). கண்ணன் மகன் முருகன் (16).
நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று காலை நெல்லை கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜபதி பகுதியில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் மாலை ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை இசக்கி தாஸ் ஓட்டினார்.
2 பேர் சாவு
நெல்லை தாழையூத்து அருகே உள்ள ரெயில்வே பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இசக்கி தாஸ் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை, சப்-இன்ஸ்பெக்டர் சுடலைக்கண்ணு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த இசக்கி தாசை மீட்டு சிகிச்சைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story