கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்து கீழ் குறைந்தது
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.
பெங்களூரு:
30 மாவட்டங்களிலும்...
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று புதிதாக ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 337 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதிதாக 8,425 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. பெங்களூரு நகரில் 3 ஆயிரத்து 822 பேர், மைசூருவில் 582 பேர், துமகூருவில் 318 பேர், ஹாசனில் 276 பேர், மண்டியாவில் 241 பேர், குடகில் 219 பேர், தார்வாரில் 211 பேர் உள்பட 30 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்தது.
வைரஸ் தொற்றுக்கு பெங்களூரு நகரில் 17 பேர், பல்லாரியில் 7 பேர், தட்சிண கன்னடாவில் 5 பேர், மைசூருவில் 3 பேர், உடுப்பி, கலபுரகி, பாகல்கோட்டை, பெலகாவியில் தலா 2 பேர், பெங்களூரு புறநகர், சித்ரதுர்கா, தார்வார், ஹாவேரி, கதக், ராய்ச்சூர், துமகூருவில் தலா ஒருவர் இறந்தனர்.
டிஸ்சார்ஜ்
15 மாவட்டங்களில் புதிதாக யாரும் இறக்கவில்லை. இதுவரை 39 ஆயிரத்து 347 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று 19 ஆயிரத்து 800 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதுவரை 37 லட்சத்து 58 ஆயிரத்து 997 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். 97 ஆயிரத்து 781 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு 6.51 சதவீதமாகவும், உயிரிழப்பு 0.55 சதவீதமாகவும் உள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று அது 10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.
Related Tags :
Next Story