ஈரோடு மாவட்டத்தில் 28½ லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது- சுகாதாரத் துறையினர் தகவல்


ஈரோடு மாவட்டத்தில் 28½ லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது- சுகாதாரத் துறையினர் தகவல்
x
தினத்தந்தி 7 Feb 2022 2:47 AM IST (Updated: 7 Feb 2022 2:47 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28½ லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28½ லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
மாபெரும் தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்திட 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 15 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்களுக்கு மேலானவர்களுக்கு 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் 496 மையங்களில் மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது. இதில், 9 ஆயிரத்து 500 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
28½ லட்சம் டோஸ்
அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் தற்போது வரை முதல் தவணை தடுப்பூசியினை 89.6 சதவீதம் பேர், அதாவது 16 லட்சத்து 22 ஆயிரத்து 225 பேரும், 2-வது தவணையினை 68 சதவீதம் பேரும், அதாவது 12 லட்சத்து 29 ஆயிரத்து 897 பேரும் செலுத்தி கொண்டுள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 28 லட்சத்து 52 ஆயிரத்து 122 டோஸ் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது என்றும், இதில், 15 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் 81 ஆயிரத்து 620 பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி 10 ஆயிரத்து 297 பேருக்கும் செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story