பேரன் இறந்த துக்கத்தில் பாட்டி தற்கொலை


பேரன் இறந்த துக்கத்தில் பாட்டி தற்கொலை
x
தினத்தந்தி 7 Feb 2022 2:56 AM IST (Updated: 7 Feb 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

இரணியல் அருகே பேரன் இறந்த துக்கத்தில் பாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திங்கள்சந்தை:
இரணியல் அருகே பேரன் இறந்த துக்கத்தில் பாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 
பேரன் சாவு
இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி குளுமைகாலனியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மனைவி ரோசம்மாள் (வயது 61). இவர்களுடைய மகள் ஜெயா. இவருடைய ஒரே மகன் ஜெகன்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெகன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விட்டார். பேரன் இறந்ததில் இருந்து ரோசம்மாள் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். 
மூதாட்டி தற்கொலை
இந்தநிலையில் சம்பவத்தன்று ரோசம்மாள் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக  ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் ரோசம்மாள் பரிதாபமாக இறந்தார். 
 இதுகுறித்து ரோசம்மாளின் கணவர் சுந்தர்ராஜ் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story