‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 7 Feb 2022 3:02 AM IST (Updated: 7 Feb 2022 3:02 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குவிந்து கிடக்கும் குப்பை 

நம்பியூர் அரசு போக்குவரத்து பணிமனை செல்லும் வழியில் உள்ள ரோட்டோரம் குப்பைகள் கொட்டப்பட்டு்ள்ளன. இதில் காற்று அடிக்கும்போது பிளாஸ்டிக் கழிவுகள் ரோட்டில் ஆங்காங்கே சிதறியபடியே கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. உடனே குப்பைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  பொதுமக்கள், நம்பியூர்.
  
வடிகால் வசதி

  கொடுமுடி அருகே சென்னசமுத்திரம் பேரூராட்சிக்கு உள்பட்ட சோளக்காளிபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி சாலை மற்றும் அருகே உள்ள வீதிகளில் கழிவுநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் வீட்டு்க்குள்ளேயே ஒரு பகுதியில் தேங்கும் நிலை உள்ளது. இதனால் நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் நிலவி வருகிறது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் வடிகால் வசதி செய்து தருவார்களா? என்று சோளக்காளிபாளையம் பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
  ராஜகோபாலன், சோளக்காளிபாளையம்.
  
  
வீணாகும் குடிநீர் 

  அந்தியூர் பர்கூர் ரோட்டில் வனத்துறை அலுவலகம் எதிரே பேரூராட்சி சார்பில் போடப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு்ள்ளது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி அருகே உள்ள சாக்கடையில் கலந்து வருகிறது. உடனே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பூபதி, அந்தியூர்.
  
குடிநீர் தொட்டி திறக்கப்படுமா?

  புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையம் ஊராட்சி பாச்சாங்காடு பகுதியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்கு சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேல்நிலை குடிநீர் தொட்டியை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  பொதுமக்கள், பாச்சாங்காடு.
  
அகற்றப்படாத குப்பை

  ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் இருந்து எல்லப்பாளையம் செல்லும் ரோட்டில் கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. இங்கு பலர் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். காற்று அடிக்கும் போது இந்த குப்பைகள் பறந்து வாய்க்காலில் விழுகிறது. இதனால் தண்ணீர் மாசுபட்டு வருகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த குப்பைகளை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ஊர் பொதுமக்கள், ஈரோடு.
  
விபத்துகளை தடுக்கவேண்டும்

  ஈரோடு சோலார் செல்லும் ரோட்டில் உள்ள மோளகவுண்டன்பாளையம் அருகே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட மூடி உடைந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்தித்து வருகின்றனர். எனவே இந்த பாதாள சாக்கடை மூடியை உடனே சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  ரமேஷ், ஈரோடு.
  


Next Story