கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
கன்னியாகுமரியில் விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
சுற்றுலா தலம்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
காலையில் சூரிய உதயம் பார்ப்பதற்காக ஏராளமானோர் கடற்கரையில் குவிந்தனர். தொடர்ந்து, கடலில் ஆனந்த குளியலிட்டு, பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
படகு சவாரி
மேலும், படகு சவாரி செய்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர். சுற்றுலா பயணிகளின் வருகையையொட்டி கன்னியாகுமரி கடற்கரை மற்றும் சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story