தரமற்ற விதைகளால் மகசூல் பாதிப்பு ஏற்பட்ட நெல் வயல்
தரமற்ற விதைகளால் மகசூல் பாதிப்பு ஏற்பட்ட நெல் வயல்
மடத்துக்குளம் பகுதியில் ஆவணங் கள் இன்றி, தனியார் விற்பனை செ ய்த தரமற்ற நெல்விதைகளால் மக சூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசா யிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நெல் சாகுபடி பிரதானம்
மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட் டு பகுதியில் நெல் முக்கிய சாகுபடி யாகஉள்ளது.ஆண்டுதோறும் சம்பா, குருவை என இரண்டு பருவங்களி ல் 6ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெ ல் நடவு செய்யப்படுகிறது. இதனால் மடத்துக்குளம் தாலுகா பகுதியில் ப ல தனியார் விதை பண்ணைகள் உ ள்ளன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் நெ ல் விதைகள் கடைகளில் வைத்து விற்கப்படுகிறது. இந்த விதை விற் பனையாளர்கள் விவசாயிகளிடம் சென்று, தங்கள்விதைகளை வா ங்கி விதைத்தால் மகசூல் அதிகரிக் கும் என உறுதி கொடுக்கின்றனர். இதை நம்பும் விசாயிகள்தனியார் கடைகளில் விதைகளை வாங்கி ந டவு செய்தனர். கடந்த சம்பா பருவ த்தில் இது போல் நடவு செய்தவை தரமற்ற விதைகளாக உள்ளதாக வி வசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
போலி விதைகள்
இதுகுறித்து விவசாயிகள் கூறிய தாவது :- ஒரு ஏக்கர் பரப்பு நடவு செய்ய 60 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை நெல் தேவைப்படுகிற து. கனியூரிலுள்ள தனியார் விதை விற்பனையாளரிடம் ஒரு மூட்டை ரூ. 4 ஆயிரம் ரூபாய் விலையில் ரூ.25 ஆயிரத்து க்கு விதைநெல் வாங்கி வேடபட்டியில் பல ஏக்கர் நடவு செய் தோம். இது தவிர நாற்றங்கால் தொ டங்கி அறுவடை வரை ஒரு ஏக்கரு க்கு அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது.
வழக்கமாக ஒரு ஏக்கர் பர ப்பிற்கு 60 மூட்டைகள் வரை அதாவ து 3,600 கிலோ நெல் மகசூல் கிடை க்கும். ஆனால் தனியார் விற்பனை செய்த தரமற்ற நெல் விதைகளால் மகசூல் இழப்பு ஏற்பட்டு இந்த அறுவடை யி ல் 10 மூட்டைகள் அதாவது 600 கி லோ வரைதான் மகசூல் கிடைத்து ள்ளது. பயிர்கள் மட்டும் வளர்ந்துள் ளன. அதில் நெல்மணி கள் இல் லை. இதனால் பெருமளவில் விவ சாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மடத்துக்குளம் தாலுகா வின் பல இடங்களிலும் இதுபோல தரமற்ற விதைகள் விற்பனை செய்யப்பட் டுள்ளன. இந்த விற்பனைக்கு பில் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் வழங் கப்படுவதும் இல்லை. சம்பந்தப்பட் ட துறையினர் தரமற்றநெல் விதைக ளை விற்றவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இனி இது போல் விவசாயிகள் பாதிக்ககூடா து" இவ்வாறு அவர்கள் தெரிவித்த னர்.
Related Tags :
Next Story