பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டம்


பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2022 6:51 PM IST (Updated: 7 Feb 2022 6:51 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் பெற்றோர், ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் பெற்றோர்- ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. திருச்செந்தூர் அரிஸ்டோகிராட்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி செயலர் ஆ.சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்லூரியின் உதவி பேராசிரியை உமா வரவேற்றார். கல்லூரி முதல்வர் பொ.சுவாமிதாஸ், கல்லூரியின் சிறப்புகளையும், கல்லூரியின் பல்வேறு செயல்பாடுகளையும் எடுத்துரைத்தார். தொடர்ந்து பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவராக ஆ.சரவணன், செயலாளராக ரூக்கஸ் ெபர்னான்டோ, பொருளாளராக செய்யது அலி பாத்திமா, உறுப்பினர்களாக ஈஸ்வரி, ஜரின், ராணி மோசஸ், சோபியா, சோபனா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இசை ,நடன பேராசிரியை சுஜாவதி மற்றும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

Next Story