வங்கி ஊழியருக்கு கொலை மிரட்டல்; தொழிலாளி கைது


வங்கி ஊழியருக்கு கொலை  மிரட்டல்; தொழிலாளி கைது
x
தினத்தந்தி 7 Feb 2022 7:01 PM IST (Updated: 7 Feb 2022 7:01 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே வங்கி ஊழியருக்கு கொலைமிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்

கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்துள்ள இனாம்மணியாச்சி நடுத்தெருவில் குடியிருப்பவர் கணேஷ் மூர்த்தி மகன் செல்லத்துரை (வயது 26). இவர் வங்கி ஒன்றில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சேர்ந்த அங்கயற்கண்ணி மகன் மாடசாமி (33). கூலி தொழிலாளி. இவர், செல்லத்துரை வீட்டு முன்பு வந்து தகராறு செய்தாராம். இதை தட்டிக்கேட்ட செல்லத்துரையை  அவதூறாக பேசி அரிவாளை காட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கைது செய்தார்.

Next Story