தாயாருடன் ஜவுளிக்கடை அதிபர் பலி


தாயாருடன் ஜவுளிக்கடை அதிபர் பலி
x
தினத்தந்தி 7 Feb 2022 7:06 PM IST (Updated: 7 Feb 2022 7:06 PM IST)
t-max-icont-min-icon

தாயாருடன் ஜவுளிக்கடை அதிபர் பலி

வுளிக்கடை அதிபர் பலியானார். கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது. 
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஜவுளிக்கடை அதிபர் 
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்தவர் ராஜா வயது 45. ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி யசோதா 38. இவர்களது  மகன் ஹரிகரன் 8, மகள் கவுசிகா 4. ராஜா தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தார். அதன்படி  ராஜா, அவருடைய மனைவி யசோதா, மகன் ஹரிகரன், மகள் கவுசிகா மற்றும் தயாார்  சரோஜா 65ஆகிேயார் ஒரு காரில்  நேற்று முன்தினம் மாலை தம்மம்பட்டியில் இருந்து பழனி புறப்பட்டனர். பின்னர் பழனி சென்று முருகனை  சாமி தரிசனம் செய்தனர். 
பின்னர் நேற்று மதியம்  12  மணிக்கு பழனியில் இருந்து சேலம் புறப்பட்டனர். காரை ராஜா ஓட்டினார். காரின் முன் இருக்கையில் சரோஜா அமர்ந்து இருந்தார். பின் இருக்கையில் யசோதா தனது குழந்தைகளுடன் உட்கார்ந்து இருந்தார். அவர்களுடைய  கார் தாராபுரம்-ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் தாராபுரம் தனியார் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தது. 
2 பேர் பலி
அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.  ராஜாவும், அவரது தாயார் சரோஜாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காருக்குள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த யசோதா, ஹரிகரன் மற்றும் கவுசிகாவை அந்த பகுதியில் உள்ள பொதுமகள் மீட்டு  சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும்  சம்பவ இடத்திற்கு விரைந்த தாராபுரம் போலீசார் உயிரிழந்த ராஜா மற்றும் சரோஜா ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்து டேங்கர் லாரி ஓட்டுநர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த  ஆறுமுகத்திடம் 37 விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மகன் 2 பேர்கள் பலியான சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story