போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை


போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 7 Feb 2022 7:46 PM IST (Updated: 7 Feb 2022 7:46 PM IST)
t-max-icont-min-icon

மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள சீர்காட்சியில் பர்குணம் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தை இதே ஊரை சேர்ந்த ராமசாமி மகன் மகாலிங்கம் (52) மேற்பார்வை செய்து வருகிறார். இவர் தோட்டத்தை சுற்றி கம்பி வலை அமைப்பதற்காக 65 கல் மற்றும் 350 அடி நீளம் உள்ள கம்பி வலை வாங்கி வைத்திருந்தார்.
இந்த நிலையில் கம்பி வலை மற்றும் கல் ஆகியவை காணாமல் போய்விட்டது. மகாலிங்கம் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தபோது அருகே உடன்குடி பகுதியைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரு டிராக்டரில் கல் மற்றும் கம்பி வலை இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து மகாலிங்கம் மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் இதில் போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியும், கல், கம்பி வலைகளை உடனடியாக மீட்டு தர வேண்டும், அவற்றை திருடியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மகாலிங்கம் மற்றும் சீர்காட்சி பொதுமக்கள் நேற்று காலையில் மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story