மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலி
x
தினத்தந்தி 7 Feb 2022 8:11 PM IST (Updated: 7 Feb 2022 8:11 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியானார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
மோட்டார்சைக்கிளில்....
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள முடிவைத்தானேந்தலை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 45). இவரது மனைவி தமிழ்செல்வி (40). 
  இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த அர்ச்சுணன் மனைவி தங்கம் (45) என்பவருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் தெய்வச்செயல்புரத்தில் உள்ள சந்தையில் பொருட்கள் வாங்கிவிட்டு ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டு இருந்தனர்.
பலி
தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் வர்த்தகரெட்டிபட்டி விலக்கு அருகே வந்த போது, நெல்லையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் தங்கம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story