வாளையார் மனோஜின் மனு தள்ளுபடி
வாளையார் மனோஜின் மனு தள்ளுபடி
ஊட்டி
கோடநாடு வழக்கில் கைது செய்யப்பட்ட வாளையார் மனோஜூக்கு கடந்த 16.07.2021 அன்று ஊட்டி கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் அவர் தனக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்து, மீண்டும் சிறைக்கு அனுப்பக்கோரி ஊட்டி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீலகிரி மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சென்னையில் இருந்தபடி அரசு சிறப்பு வக்கீல் ஷாஜகான் ஆஜராகி, வழக்கில் 2-வது குற்றவாளியாக கருதப்படும் மனோஜூக்கு நிபந்தனை ஜாமீனை ரத்து செய்யவும், மீண்டும் சிறைக்கு அனுப்பவும் சட்டத்தில் இடம் இல்லை என்றுக்கூறி கடும் ஆட்சேபனை தெரிவித்தார். அதற்கு எதிர்தரப்பு வக்கீல் முனிரத்தினம், ஊட்டியில் தங்க இடம் இல்லாமலும், வேலை கிடைக்காமலும் வாளையார் மனோஜ் பாதிக்கப்பட்டு வருகிறார். மீண்டும் சிறைக்கு அனுப்புவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை என்று வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிபந்தனை ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறைக்கு அனுப்ப கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story