நீட் தேர்வு விவகாரத்தில் திமுக நடத்துவது கண்துடைப்பு நாடகம் என்று கோவையில் பாஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்


நீட் தேர்வு விவகாரத்தில் திமுக நடத்துவது கண்துடைப்பு நாடகம் என்று கோவையில் பாஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்
x
தினத்தந்தி 7 Feb 2022 9:29 PM IST (Updated: 7 Feb 2022 9:29 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக நடத்துவது கண்துடைப்பு நாடகம் என்று கோவையில் பாஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்


வடவள்ளி

நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. நடத்துவது கண்துடைப்பு நாடகம் என்று கோவையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக ளில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கோவை வடவள்ளியை அடுத்த இடையர்பாளையம் பிரிவில் நடந்தது. 

இதற்கு கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பா.ஜனதா கட்சிக்கு மிக, மிக முக்கிய மானது. ஏனென்றால் நாம் தற்போது தனித்து களம் இறங்கி உள்ளோம். 

எனவே நம்முடையை முழு வலிமையையும் மற்றவர்களுக்கு காட்ட வேண்டும். தனித்து போட்டியிடுவதன் மூலம் கட்சிக்கு கிடைக்க கூடிய வாக்கு சதவீதத்தை அறிந்து கொள்ள முடியும்.

காலில் விழ வேண்டும்

தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் தான் இருக்கிறது. எனவே பா.ஜனதா வேட்பாளர்கள் தங்களின் முழுபலம், உழைப்பை காட்ட வேண்டும். 

இதற்காக தினமும் 50 முதல் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தேடி சென்று அவர்களின் காலில் விழுந்து மத்திய பா.ஜனதா அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண் டும். 

சமூகவலைத்தளத்தை 25 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்க்கிறார்கள். அவர்களையும் கவரும் வகையில் வாக்குசேகரிக்கும் பணி சிறப்பாக இருக்க வேண்டும். 

வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்  ஒருங்கிணைந்து பா.ஜனதாவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது

நீட் தேர்வு விவகாரம்

கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் கடுமை யான போட்டி நிலவுகிறது. 

உள்ளாட்சியில் நல்லாட்சி நடைபெற கோவை மக்கள் கண்டிப்பாக பா.ஜனதாவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வார்கள். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. கண்துடைப்பு நாடகம் நடத்தி வரு கிறது. நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு, எங்கு சென்றாலும் கிடைக்கும் ஒரே பதில் நீட் தேர்வு நல்லது என்பது தான். 

நீட் தேர்வு தீர்மானமா னது கடந்த 2017-ம் ஆண்டே நிராகரிக்கப்பட்டு விட்டது. 

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது கிடையாது. தமிழகத்தில் தி.மு.க. பதவியேற்று 8 மாதங்கள் ஆகிறது. 

ஆனால் இதுவரை அவர்கள் ஒன்றுமே செய்ய வில்லை.

மக்கள் நலத்திட்டங்கள்

70 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி செய்ததை விட பா.ஜனதா கட்சி 7 ஆண்டு ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செய்து உள்ளது.

 தமிழகத்திற்கும் எண்ணற்ற நல்ல திட்டங்கள் பிரதமர் மோடி செயல்படுத்தி உள்ளார். 

கர்நாடகத்தில் பள்ளிகளில் பெண்கள் பர்தா அணிய அந்த மாநில அரசு தடை விதித்த விவகாரத்தில் பா.ஜனதா எந்த மதத்தையும் முன்னெடுத்து செல்லவில்லை. 

எல்லா மதத்தினரை யும் ஒன்றாகவே கருதுகிறது. காங்கிரஸ் கட்சி தான் மதத்தை கையில் எடுத்து செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story