பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்


பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 7 Feb 2022 10:05 PM IST (Updated: 7 Feb 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

பாண்டமங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

பரமத்திவேலூர்:
பாண்டமங்கலத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தேர்த்திருவிழா
நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தேரோட்ட விழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
விழாவையொட்டி கொடியேற்றப்பட்டு சாமி அன்ன வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த ‌31- ந் தேதி முதல் 6-ந் தேதி வரை தினந்தோறும் இரவு 7 மணிக்கு சிம்ம வாகனம், சிறிய திருவடி அனுமந்த வாகனம், பெரிய திருவடி கருடசேவை, சேஷ வாகனம், யானை வாகனம், மற்றும் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 
தீர்த்தவாரி
விழாவில் நேற்று காலை சாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி‌‌ நடைபெற்றது. இதில் பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். 
‌தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தீர்த்தவாரியும், இரவு கெஜலட்சுமி வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், நாளை (புதன்கிழமை) மாலை திருமஞ்சனமும், இரவு மஞ்சள் நீராடல் விழாவும் நடக்கிறது. 10-ந் தேதி மாலை புஷ்பயாகமும், 11-ந் தேதி இரவு மணிக்கு சாமி புறப்பாடும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Next Story