சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு
சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு
சங்கராபுரம்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. சங்கராபுரம் தேர்வு நிலை பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 15 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இ்ந்த நிலையில் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்குச்சாவடி மையத்தில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.இதைத் தொடர்ந்து சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணியினையும் அவர் பர்வையிட்டார். அப்போது வட்டார தேர்தல் பார்வையாளர் ரத்தினமாலா, தேர்தல் நடத்தும் அலுவலர் சம்பத்குமார், இளநிலை உதவியாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story