வேடசந்தூர் அருகே நூற்பாலை வேன் கவிழ்ந்து 6 பெண்கள் படுகாயம்
வேடசந்தூர் அருகே நூற்பாலை வேன் சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் 6 பெண் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே நூற்பாலை வேன் சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் 6 பெண் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
பெண் தொழிலாளர்கள்
வேடசந்தூர் அருகே கோட்டையூரில் தனியார் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் வேடசந்தூர் அருகே மலைப்பட்டியில் இருந்து கோட்டையூர் நூற்பாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று நேற்று காலை புறப்பட்டது. அந்த வேனில் டிரைவர் மற்றும் 10 பெண் தொழிலாளர்கள் இருந்தனர்.
மலைப்பட்டி-பாகாநத்தம் சாலையில் புத்தூர் பாலம் அருகே அந்த வேன் வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் அந்த வேன் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
டிரைவருக்கு வலைவீச்சு
இந்த விபத்தில் வேனில் வந்த பெண் தொழிலாளர்களான மலைப்பட்டியை சேர்ந்த பொன்மணி (வயது 29), பொன்னம்மாள் (28), சிவபாக்கியம் (29), ஜோதிமணி (29), வெண்ணிலா (18), நொச்சிகுளத்துப்பட்டியை சேர்ந்த ராசாத்தி (17) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். வேன் கவிழ்ந்த சிறிது நேரத்தில் வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதைத்தொடர்ந்து விபத்தில் காயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்.

Related Tags :
Next Story